Wednesday, February 15, 2006

மதவாதி என்பவன் யார்? -- 1

கேள்வி : "மதத்தின் காரணத்தால் ஒருவனுடைய முடிவு மாறுபட்டால் அவன் மதவாதியா?"

உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தில் பனிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் மேளாளர் பதவியில் நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். 3 ஆட்களை நேர்காணல் செய்கிறீர்கள். அனைவரும் ஒரே கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்று சாதித்தவர்கள். மூவருமே தகுதியில் சளைத்தவர்கள் அல்ல என்று உணருகிறீர்கள். அவர்களில் ஒருவர் மட்டும் உங்கள் மதமாயிருப்பின், உங்களின் முடிவு அவரைச்சார்ந்து இருக்குமா? அப்படியிருந்தால் நீங்கள் மதவாதியா?

விடைகள்:

1. சமமான வேட்பாளர்கள் என்ற முறையில் இது தவறல்ல, தொன்றுதொட்டு நடப்பது தான். அதனால் இது மதவாத செயலாகாது.
2. இல்லவே இல்லை. மேளாளர், வேரொரு முறையை கையாண்டு மிகச்சிறந்த நபரை பாரபட்சமின்றி தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். ஆக இவர் சரியான மதவாதியே.
3. உங்கள் மாறுபட்ட கருத்துக்களையும் சொல்லுங்களேன்.

முதல் பதிவு - என் அவள்.

தமிழ்மணம் வலைப்பதிவுகளுக்கு நான் ஒரு கைக்குழந்தைங்க. பொறந்து 2 வாரந்தான் ஆகுது. இந்த 2 வாரத்துலயே என்னால கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல தெரிஞ்சுக்க முடிஞ்சுது. முதல் பெயர் விகிதத்துல இல்லாம கொஞ்ச நாள் பழக்கம் போல உணர்ந்தேன். இவ்வளவு நாள் நம்மளாலெல்லாம் எழுத முடியுமான்னு சந்தேகமாவே இருந்துச்சு. இன்னைக்கு காதலர் தினம்-ங்கிறதுனாலயும், உலகமெங்கிலும் மனித உறவுகளுக்கான உணர்ச்சிப்பரிமாற்றத்தின் முகூர்த்த நாள்-ங்கிறதுனாலயும், இன்னையிலேர்ந்து எப்படியாவது எழுதனும்னு முடிவு செஞ்சுட்டேன்.
முதல் பதிவுலேயே கருத்து சொல்லி ஆரம்பிக்க மனசு வரலை. கோப்புக்களை பெரிதாக்க இன்னும் நாள் இருக்கு. அதனால ஒரு சின்ன கவிதையோட என் முதல் பதிவை இனிதே ஆரம்பிக்கிறேன்.


என் அவள்



முதல் நிமிடம்:
ஒரு நிமிடம் காந்த சக்தியை உணர்த்தினாள்,
நீங்கா ரூபமாய் விழிகளில் தோன்றினாள்,
சிந்தையின் செல் அனைத்திலும் நிறைந்தாள்,
கண்டதும் காதலை எடுத்துக்காட்டுடன் விளக்கினாள்,

முதல் நாள்:
உணவில்லாமலும் நான் வாழமுடியுமென்று உணர்த்தினாள்,
விழித்துக்கொண்டே தூங்கவும் கற்றுக்கொடுத்தாள்,
சொற்பக்கனவுகளையும் மணிநேரம் நீட்டித்தாள்,
காலமெல்லாம் கைபிடித்து நடக்கப்போவது நான்தானென்றாள்.

முதல் வாரம்:
காதல் பாடல்களை பொருளுணர்த்தி ரசிக்கச்செய்தாள்,
கற்கும் பாடத்தையும் கருத்தூண்றி கேட்கச்செய்தாள்,
'வேண்டுமா நானுனக்கு' - மொளனமாய் வினவினாள்,
'தகுதிப்படுத்துக்கொள்' - சிந்தனையால் பனிப்பித்தாள்.

மூனாவது ஆண்டு:
முழு மூண்று ஆண்டுகள், ஊமையாய் நேசித்தேன்,
கற்பணையோடத்தில் களிப்பாய் ரசித்திருந்தேன்,
'இவனல்லவா பிள்ளை' - அவள் பெற்றோரையும் சொல்லவைத்தேன்,
பாதிக்கிணறு முடிந்ததென்று பெருமூச்செறிந்தேன்.

முடிவில்:
'இன்னொருவனுடன் காண்கிறோம்' - நண்பர்கள் கூறினர்,
'இழக்கப்போகிறேன் என்மகளை' - தந்தையும் மனங்கசந்தார்,
'கனவிலே என் வாழ்க்கையோ' - எனக்குள்ளே நான் கதைத்தேன்,
'காலந்தாழ்த்திவிட்டேனே' - கவலையிலே எனைச்சிதைத்தேன்.

அன்று முதல்:
உணர்ந்திருக்க முடியாது காதல் உணர்வை உனையின்றி,
உணர்த்தியதற்காய் உனக்கே என்முழு நன்றி,
பார்காக்கும் தெய்வத்தின் பார்வையிலே நீவாழ்வாய்,
மணம்முடிக்கும் தேவதையின் பாசத்தில் நான்வாழ்வேன்.


Tuesday, February 14, 2006

இறைவா...


உயிர் தந்தாய்,
உலகை அறிந்துகொள்ள உணர்வும் தந்தாய்,
ஞானம் ஈந்தாய்,
நான் அதை அறிய மதிநுட்பமும் தந்தாய்,
பொருள் தந்தாய்,
பொருள் புரியும் மாயையுணர்த்தினாய்,
வாழ்வு தந்தாய்,
வழியுமாய், வெளிச்சமுமாய், விரிந்து நின்றாய்,
உனைத்தொழுது இவ்விடம் புகுகிறேன்,
இடர்நீக்கி உதவிசெய் என்னிறைவா.